பா.ஜ.க.வை உளவு பார்த்த விவகாரம் இருதரப்பு உறவை பாதிக்காது: ஜென் சாகி நம்பிக்கை!

jen psakiபா.ஜ.க.வை உளவு பார்த்த விவகாரம் இருதரப்பு உறவை பாதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கட்சியை உளவு பார்த்தது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படாது என நம்புவதாக தெரிவித்தார். இந்த பிரச்னை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரில் விளக்கமளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், உளவு பார்க்கப்படும் கட்சிகளின் பட்டியலில் இருந்து பாரதிய ஜனதா கட்சி நீக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்தியாவுடன் ஆழமான நட்புறவு நீடிப்பதாகவும், உளவு பார்த்த விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்னைகள் பற்றி தூதரக ரீதியாக தொடர்ந்து பேசப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், அமெரிக்கா வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறினார். இருதரப்பு உறவு மற்றும் பிராந்தியப் பிரச்னைகள் குறித்த பேச்சுவார்த்தை தொடர்வதையே அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top