லிட்டில் இண்டியா கலவரம்: மேலும் ஒரு தமிழருக்கு ஒன்பது மாத சிறை

0447da76-cb77-49fd-af0c-94a2197fd483_S_secvpfசிங்கப்பூரில் உள்ள லிட்டில் இண்டியா கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8–ந்தேதி சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த ஒரு பஸ் விபத்தில் தமிழர் ஒருவர் பலியானார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 400 பேர் ஈடுபட்டனர். அதில் 43 பேர் காயம் அடைந்தனர். 24 வாகனங்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக இந்தியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணைக்கு பின் ஏற்கனவே சில நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மற்ற நபர்களின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் பழனிவேல் மோகன்தாஸ் என்ற தமிழருக்கு தற்போது ஒன்பது மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top