உயர்நீதிமன்றத்திலும் தமிழ் மலர வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்படுவதற்கு தமிழக அரசு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழ் நீதிமன்றங்களில், ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுத அனுமதியளிக்கும் பதிவாளரின் சுற்றறிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இதேபோல், உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக்கப்படுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அரசும், வழக்கறிஞர்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் பேசும் வழக்கறிஞர்கள் தமிழிலேயே வாதாட வசதியாக, தமிழ்ச் சட்டப் புத்தகங்கள் மற்றும் குறிப்புகளைக் கொண்ட நூலகத்தை அரசு அமைத்துத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க, கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், 8 ஆண்டுகள் ஆகியும், அதற்கான எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றோ, தேவைப்பட்டால் புதிய தீர்மானத்தை நிறைவேற்றியோ சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top