வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனு: தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

supreme courtவோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரிச் சட்டத்தில் சலுகை வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு தள்ளுபடியானது.

வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரிச் சட்டத்தில் சலுகை வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்றைக்கு (ஜூலை 1-ம் தேதி) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், வோடபோன் நிறுவனத்துக்கு எதிரான பொது நல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும், மனுதாரர் புதிதாக மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

பிரிட்டனின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் 2007-ம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தை கையகப்படுத்தியது தொடர்பாக ரூ.7,990 கோடி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித் துறை நோட்டீஸ் அளித்தது. இந்த தொகையை வோடபோன் நிறுவனம் செலுத்த மறுத்ததால், வட்டியுடன் சேர்த்து பாக்கித் தொகை ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

இந்நிறுவனத்துக்கு சிறப்புச்சலுகை அளித்து, சமரசத்தில் ஈடுபட கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்பேரில், சமரசத்தில் ஈடுபட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிஸ்வாஜித் பட்டாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “வெளிநாட்டு நிறுவனங் களிடமிருந்து வரியை வசூலிக்க, வருமான வரி சட்டத்தின் பிரிவு 9-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டே திருத்தம் கொண்டுவரப்பட்டும் அதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இது அனைவரும் சமம் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கையை மீறும் செயல்.

வோடபோன் நிறுவனத்துக்காக, இந்திய நெதர்லாந்து இரு தரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. வரிச்சட்டத்தை மீறுதல் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது. எனவே, சமரச திட்டத்தை ரத்து செய்து வரி பாக்கியை வசூலிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. Your article peftecrly shows what I needed to know, thanks!

Your email address will not be published.

Scroll To Top