விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: ஜோகோவிச், முர்ரே கால் இறுதிக்கு தகுதி

djokovichகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செக்பியா)–சோங்கா (பிரான்ஸ்) பலப்பரீட்சை நடத்தினர். முதல் 2 செட்டுகளை ஜோகோவிச் 6–3, 6–4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

3–வது செட்டில் சோங்கா நெருக்கடி கொடுத்தார். இருந்தபோதிலும் அந்த செட்டையும் ஜோகோவிச் 7–6 (7–5) என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்று கால் இறுதிக்குள் தகுதி பெற்றார்.

4–வது சுற்று ஆட்டத்தில் 3–ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரேவும் – தென் ஆப்பிரிக்காவின் ஆன்டர்சனும் மோதினர். இதில் முர்ரே 6–7, 6–3, 7–6 (8–6) என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினர்.

கால்இறுதியில் ஜோகோவிச், குரோஷியா வீரர் சிலிக்குடனும், ஆன்டி முர்ரே பெல்ஜியம் வீரர் டிமிட்ரோவ்வுடனும் மோதுகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்றில் ரஷியாவின் மக்ரோவா 6–3, 6–0 என்ற நேர் செட் கணக்கில் 4–ம் நிலை வீராங்கனையான ரட்வன்ஸ்காவை (போலந்து) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினர்.

கால் இறுதியில் மக்ரோவாவும், சப்ரோலாவும் (செக் குடியரசு) மோதுகிறார்கள். இதே போல பவுச்சார்ட் (கனடா), கிவிடோவா (செக் குடியரசு) ஆகியோர் 4–வது சுற்றில் வெற்றி பெற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top