இந்தோனேசிய முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை!

0a74143b-804c-4e41-a532-b5e689732221_S_secvpfஇந்தோனேசியாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம், அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அகில் மோச்டார் லஞ்சம் வாங்கியபோது ஊழல் ஒழிப்பு ஆணையம் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தது. அந்நாட்டில் நடைபெற்ற இரு உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் தொடர்பாகவே அவர் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து வந்த ஐந்து பேர் குழுவினர், மாகாண தலைவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் முடிவுகளை மாற்ற உத்தரவிட 3.3 மில்லியன் டாலரை அவர் லஞ்சமாக பெற்றதை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.

இதையடுத்து அவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவிடியா, நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் கவுரவத்திற்கு களங்கம் விளைவித்த அகில் மோச்டாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top