மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் திடீர் பதவி விலகல்!

m-k-narayananஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உள்ள நிலையில், மேற்குவங்க ஆளுநர் பதவியில் இருந்து எம்.கே.நாராயணன் விலகியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்குவங்க ஆளுநராக எம்.கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான அமைந்த புதிய அரசு, சில மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில ஆளுநர் உள்பட சில மாநில ஆளுநர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனி்டையே, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக மேற்குவங்க ஆளுநர் எம்.கே.நாராயணனிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து எம்.கே.நாராயணன் விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் அனுப்பியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top