ஒரே படத்தில் சந்தானம், சூரி..! சேர்த்து வைத்த சிம்பு!

santhanam-sooriசிரிப்பு நடிகர்களில் இன்றைக்கு சந்தானத்துக்கும் சூரிக்கும்தான் போட்டி. ஆரம்ப காலத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்தனர். சந்தானத்துக்கு சமமாக சூரி வளர்ந்த பிறகு இருவருக்கும் இடையில் ஈகோ வந்துவிட்டது.

அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்பது ஒருபக்கமிருக்க, இருவரும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தனர். சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில் சூரி கமிட்டான பிறகு இவர்களின் ஈகோ மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. சிம்புவின் ஆஸ்தான காமெடியன் சந்தானம்தான். இது தெரிந்தும் தனக்கு வேண்டப்பட்ட சூரியை காமெடியனாக்கிவிட்டார் பாண்டிராஜ்.

அதனால் சிம்பு மீதே வருத்தத்தில் இருந்தார் சந்தானம். அவரை சமாதானப்படுத்திய சிம்பு பாண்டிராஜிடம் பேசி இது நம்ம ஆளு படத்தில் சந்தானத்தையும் நடிக்க வைத்திருக்கிறார்.

சூரியும் சந்தானமும் தனித்தனி கதைப்படி ஏரியாவில் இருப்பதுபோல் காட்சிகளை அமைத்திருக்கிறாராம் பாண்டிராஜ். சந்தானத்தை திடீரென இது நம்ம ஆளு படத்தின் உள்ளே கொண்டு வந்ததால் கடுப்பில் இருக்கிறாராம் சூரி.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top