விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றிற்கு முர்ரே, லீ நா முன்னேற்றம்

Andy Murrayகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-1, 6-1, 6-0 என்ற நேர் செட்டில் புதுமுக வீரர் சுலோவேனியாவின் பிளாஸ் லோவை பதம் பார்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

7-ம் நிலை வீரர் ஸ்பெயினின் டேவிட் பெரர் 7-6 (5), 0-6, 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஆன்ட்ரே குஸ்னெட்சோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மற்றபடி டிமிட்ரோவ் (பல்கேரியா), பேபியோ போக்னினி (இத்தாலி), ஸ்டாகோவ்ஸ்கி (உக்ரைன்), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), ஜெர்மி சார்டி (பிரான்ஸ்) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

பெண்கள் பிரிவில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் செக்குடியரசின் கிவிடா பெட்ரோவா 6-2, 6-0 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் மோனே பார்தலை நொறுக்கினார். 2-ம் நிலை வீராங்கனை சீனாவின் லீ நா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மியூஸ் பர்ஜெரையும் (ஆஸ்திரியா), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-6 (4), 6-1 என்ற நேர் செட்டில் குருமி நராவையும் (ஜப்பான்) வென்றனர்.

இன்னொரு ஆட்டத்தில் போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா 6-4, 6-0 என்ற நேர் செட்டில் கேசி டெல்லாக்குவாவை (ஆஸ்திரேலியா) விரட்டி 3-வது சுற்றை எட்டினர். இந்திய இளம் வீரர்கள் புராவ் ராஜா, பிரேசிலின் மார்சிலோ டெமோலினருடனும், திவிஜ் ஷரண், சீனத் தைபையின் பெய்-சுன்-லுவுடனும் கைகோர்த்து விம்பிள்டனில் பங்கேற்றனர். இந்த இரு ஜோடிகளும் முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top