நியூசிலாந்து அணிக்கு 279 ரன்கள் இலக்கு : இந்தியா நிர்ணயம்

rohit-300-pulls-nzதோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த முதல் இரண்டு,ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.மூன்றாவது போட்டி சமனில் முடிந்தது.
இந்நிலையில் ஆக்லாந்தில், இன்று நடைபெற்று வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.தொடக்க வீரரான தவான் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் வீராட் கோலியும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.கோலி 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த ரஹேனாவும் 3 ரன்னில் வெளியேற, இந்திய அணி 22 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த ராயுடு, அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினார். 38 பந்தில் 37 ரன் எடுத்திருந்த ராயுடு, பென்னட் பந்தில் ஆட்டம் இழந்தார்.அரை சதமடித்த ரோஹித் சர்மாவும் 79 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் டோனி- ஜடேஜா ஜோடி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 278 ரன்கள் குவித்தது.கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 79 ரன்களும்,ஜடேஜா 62 ரன்களும் குவித்தனர்.இதையடுத்து, நியூசிலாந்து அணி 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தோல்வி அடையும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழக்க நேரிடும்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top