கரூர் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினர்கள் சாலை மறியல்

oQcTDZgகரூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த அந்த சிறுமி, நேற்று வேலைமுடிந்து வீடுதிரும்பவில்லை. இதனால், அவரைத் தேடிய உறவினர்கள் பிச்சம்பட்டிக்கு செல்லும் சாலையிலுள்ள வெற்றிலைத்தோட்டத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆடைகள் இன்றி சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும், கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்  எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top