ஒருநாள் கிரிகெட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது இந்தியா!

2014121163420ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றதன் மூலமும், நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்ததின் மூலமும் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா தற்போது 117 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவும் 117 புள்ளிகள் பெற்றுள்ள போதும், சில டெசிமல் புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளதால் தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.நியூஸிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தால் மட்டுமே இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top