ஹாக்கி இந்தியா லீக்: பஞ்சாப் அணி வெற்றி

Hockeyஹாக்கி இந்திய லீக் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் உத்தரப் பிரதேச விசார்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ராஞ்சி ரைனோஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இரண்டாம் ஆண்டு ஹாக்கி இந்திய லீக் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ராஞ்சி ரைனோஸ் மற்றும் உத்தரப் பிரதேச விசார்ட்ஸ் அணிகள் மோதின. இதில், 3-2 என்ற கோல் கணக்கில் உத்தரப் பிரதேசம் வெற்றி பெற்றது.

மொகாலியில் நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் வாரியர்ஸ், மும்பை மேஜிசியன்ஸ் அணிகள் மோதின. அபாரமாக விளையாடிய பஞ்சாப் வாரியர்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பெற்றது. இதுவரை பஞ்சாப் அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில், பஞ்சாப் வாரியர்ஸ் அணி, டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இன்று இரவு 8 மணிக்கு ராஞ்சியில் நடைபெறவுள்ள லீக் போட்டியில், ராஞ்சி ரைனோஸ், டெல்லி வேவ்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top