எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கவுன்சிலிங்: 2521 இடங்கள் நிரம்பின

mbbs studentsஅரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு முதல் கட்ட கவுன்சிலிங் கடந்த 17–ந்தேதி தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் கவுன்சிலிங் நடந்தது.

19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2023 எம்.பி.பி.எஸ். இடங்கள், 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், ஒரு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களுக்கு நடந்த முதல் கட்ட கவுன்சிலிங் இன்று நிறைவு பெற்றது.

முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கும் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடந்தது. 28 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். முதல் கட்ட கவுன்சிலிங்கில் 2521 எம்.பி.பி.எஸ். இடங்களும், 85 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின.

அடுத்த கட்ட கவுன்சிலிங் ஜூலை முதல் வாரம் தொடங்குகிறது. 2–வது கட்ட கவுன்சிலிங்கில் 175 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகின்றன. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 100 இடங்களும், சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 25 இடங்களும் 2–வது கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.

இதுதவிர 3–வது கட்டமாக ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் பல் மருத்துவ கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடக்கும்.

அடுத்த கட்ட கவுன்சிலிங் பற்றிய விவரங்கள் இணைய தளம் மூலம் தெரிவிக்கப்படும். மாணவ–மாணவிகளுக்கு தனித்தனியாக கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட மாட்டாது என்று மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் டாக்டர் சுகுமாறன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top