மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜான் கெர்ரி பயணம்!

john kerryஈராக் உள்நாட்டு போர் தொடர்பாக ராஜாங்க ரீதியான தீர்வு காண்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுறுத்தலின் படி அவர் பேச்சுவார்த்தை நடத்த செல்வதாக கூறப்படுகிறது. வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கெர்ரி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் ஈராக் விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஈராக் தலைவர்கள் தங்களிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து தீவிரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே ஈராக் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த 300 ராணுவ ஆலோசகர்கள் ஈராக் செல்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top