ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்:ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

_72530144_wawrinkaஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந் வீரர் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் 8-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா முதல்நிலை வீரரான ரஃபேல் நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இப்பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.இது இவர் பெரும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

2 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இரு செட்களை கைப்பற்றி போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார் வாவ்ரிங்கா.இரண்டாவது செட்டின் இறுதியின் போது முதுகுவலியால் அவதிப்பட்ட நடால் சிகிச்சைக்காக ஒய்வு பெற்றார்.சிகிச்சைக்கு பின்னர் திரும்பிய நடால் மூன்றாவது செட்டை போராடி தன்வசப் படுத்தினார்.இதன் மூலம் போட்டி நான்காவது சுற்றிற்கு நகர்ந்தது.

ஆனால் 4வது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த செட்டையும் கைபற்றிய வாவ்ரிங்கா முதன் முறையாக பட்டதை வென்றார். இதற்கு முன்னர் நடாலுடன் 12 போட்டிகளில் விளையாடியுள்ள வாவ்ரிங்காவிற்கு இது முதல் வெற்றியும் கூட.சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்காவிற்கு ரூ.14½ கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இவ்வெற்றி குறித்து வாவ்ரிங்கா கூறுகையில்,

என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஓபன் தான் மிகச்சிறந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். கடந்த ஆண்டில் இங்கு ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்த போது கண்ணீர் விட்டு அழுதேன். இந்த ஓராண்டு இடைவெளியில் நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. இப்போது இது கனவா அல்லது நனவா என்பது எனக்கு தெரியவில்லை.

இது புதுமையான அனுபவமாகும்.நடாலுக்காக நான் வருந்துகிறேன். அவர் விரைவில் உடல் நலன் பெற்று திரும்புவார். அவர் சிறந்த வீரர் மட்டுமின்றி எனது நண்பரும் ஆவார். அவர் வியப்புக்குரிய ஒரு சாம்பியன். அவருடன் இணைந்து விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியது என்றார்.

அண்மையில் நடைபெற்ற சென்னை ஓபனில் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top