இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 6 பேர் பலி

0843f198-5435-430f-a7f3-8fe1623693b1_S_secvpfஇந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் இறந்தனர்.

மேற்கு ஜாவாவின் போகர் மாவட்டத்தில் நேற்று முதல் கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் மேகர்வாங்கி கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீட்டர் உயரமுள்ள மலையில் இருந்து சேறும் சகதியும் மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்தது. இதில் 5 வீடுகள் மண்ணில் புதைந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதையுண்ட வீடுகளில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 பேரைக் காணவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top