கிருஷ்ணா நதி நீரை திறக்கக் கோரி ஆந்திராவில் 25–ந் தேதி தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

249c07fa-8080-4b52-a1f9-abdfc4e55f28_S_secvpfசென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி 1 ஆண்டுக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தான் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. 5.8 டி.எம்.சி. தண்ணீர் பூண்டிக்கு வந்த நிலையில் மே 31–ந்தேதி கிருஷ்ணா தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்திவிட்டது.

கால்வாய் பராமரிப்பு பணி நடைபெறுவதால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிகள் முடிவடைந்ததும் தண்ணீர் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் நாளுக்கு நாள் தண்ணீர் குறைந்து கொண்ட போவதால் ஜூலை மாதத்தில் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுமாறு தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபற்றி ஆந்திர அதிகாரிகளுடன் நேரில் சந்தித்து பேசுவதற்காக சென்னை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர், கிருஷ்ணா நீர் கண்காணிப்பு பொறியாளர் பாலாஜி, வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் அடுத்த வாரம் ஆந்திரா செல்கின்றனர். வருகிற 25–ந்தேதி அங்கு பேச்சுவார்த்தை நடக்கிறது.

கண்டலேறு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top