பாஜகவில் சேர்கிறார் ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி!

kirankumarஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்–மந்திரியாக இருந்தவர் கிரண்குமார் ரெட்டி. ஆந்திரா பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அதோடு புதிய அரசியல் கட்சியையும் தொடங்கினார்.

ஆந்திராவில் நடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் கிரண்குமார் ரெட்டி கட்சி படுதோல்வி அடைந்தது. அவரது முக்கிய ஆதரவாளர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர்.

4 முனைப்போட்டியில் அவர் கட்சி காணாமல் போய்விட்டது. இந்த படுதோல்வி, கிரண்குமார் ரெட்டியின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

அடுத்தக்கட்டமாக என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி கிரண்குமார் ரெட்டி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தால்தான் எதிர்கால அரசியல் பிரகாசமாக இருக்கும் என்று அவரிடம் கூறப்பட்டது.

முதலில் இதை ஏற்க கிரண்குமார் ரெட்டி தயங்கினார். இந்த நிலையில் அவரது சகோதரர்கள் பா.ஜ.க.வில் சேர்வதுதான் சரியான முடிவாக இருக்கும் என்றனர். இதையடுத்து பா.ஜ.க.வில் சேர கிரண்குமார் சம்மதித்தார்.

கிரண்குமார் ரெட்டியின் சகோதரர்களில் ஒருவர் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வசித்து வருகிறார். அவருக்கும் கர்நாடகா பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கும் நல்ல நெருக்கமான நட்பு உள்ளது. இதன் மூலம் அவர் டெல்லி பா.ஜ.க. தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே கிரண்குமார் ரெட்டி வந்தால் அவரை முழு மனதுடன் வரவேற்க டெல்லி பா.ஜ.க. மூத்த தலைவர்களும் தயாராக உள்ளனர். தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை வலுப்படுத்த விரும்பும் பா.ஜ.க. தலைவர்கள், ‘‘ஆந்திராவில் கிரண்குமார் ரெட்டி மூலம் பா.ஜ.க.வை வலுப்படுத்த முடியும்’’ என்று கருதுகிறார்கள்.

எனவே கிரண்குமார் ரெட்டி விரைவில் பா.ஜ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் ஏற்கனவே தோல்வியை சந்தித்த காங்கிரசாருக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top