
இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ருமேனிய வீரர் ஹோரியா டெகாவ் ஜோடி ஃப்ரான்ஸின் கிறிஸ்டினா, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியுடன் இறுதி போட்டியில் மோதியது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கிறிஸ்டினா மற்றும் நெஸ்டர் ஜோடி முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரண்டாவது செட்டிலும் சானியா – ஹோரியா டெகாவ் ஜோடியால் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து 2-வது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றிய கிறிஸ்டினா – நெஸ்டர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.