கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

metro trainசென்னை கோயம்பேடு – ஆலந்தூர் இடையே இருவழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கோயம்பேடு ஆலந்தூர் வழித்தடத்தில் மின் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ரயில் தண்டவாளங்களின் உறுதி மற்றும் சிக்னல் உள்ளிட்டவை சோதிக்கப்பட்டன. இன்று மாலையும் இதே வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சோதனை வெற்றி பெறும்பட்சத்தில், விரைவில் இந்த வழித்தடத்தில் வர்த்தக ரீதியிலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top