2 நாட்களில் ஆந்திரா, தெலங்கானாவில் வெயில் கொடுமைக்கு 220 பேர் பலி!

வெயில் கொடுமைஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2நாட்களில் மட்டும் 220 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடலோர ஆந்திராவில் உள்ள விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், நெல்லூர், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது. கோடை வெயில் முடிந்தும் வழக்கத்தைவிட 6-ல் இருந்து 8 டிகிரி வரை கூடுதலாக வெயில் கொளுத்துகிறது. கடுமையான வெயிலின்் காரணமாக, நோயாளிகள், முதியோர், குழந்தைகள் என பல தரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 220 பேர் வெயில் கொடுமைக்கு பலியாகி உள்ளனர்.

இதில் வட ஆந்திராவில்தான் அதிகம் பேர் பலியாகியுள்ளனர். இங்கு மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். காகுளம் 42, விசாகப்பட்டினம் 26, கிழக்கு கோதாவரி 18, பிரகாசம் 11, விஜயநகரம், மேற்கு கோதாவரியில் தலா 9 பேரும், நெல்லூரில் 4 பேரும் இறந்துள்ளனர். இதேபோன்று தெலங்கானா மாவட்டங்களிலும் வெயில் கொடுமைக்கு பலர் பலியாகி உள்ளனர்.

கடுமையான வெயில் குறையாதா என மக்கள் ஏங்கும் நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோரப் பகுதிகளில் சாதாரணமாகவே வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் கடலோர மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனல் காற்று வீசுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுகின்றனர். இந்தக் கடுமையான வெயில் காரணமாக இறந்தவர்களில் முதியோர், குழந்தைகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top