ஏடிபி டென்னிஸ்: ஆண்டி முர்ரே அதிர்ச்சித் தோல்வி!

Andy Murray during his defeat to Radek Stepanek during the Aegon Championships at Queen's Clubலண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆண்டி முர்ரே செக் குடியரசு வீரர் ரடாக் ஸ்டெப்னாக்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட் ஆட்டம் டைபிரேக்கர் வரை நீடித்தது. சிறப்பாக விளையாடிய ரடாக் 7 – 6 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த ரடாக், இரண்டாவது செட்டையும் 6 – 2 என சுலபமாக கைப்பற்றி நடப்புச் சாம்பியன் முர்ரேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதில் தோல்வியடைந்த முர்ரே 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

மற்றொரு ஆடவர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, தாமஸ் பெர்டிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top