சந்திரபாபு நாயுடு மந்திரி சபையில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு!

andraபுதிய ஆந்திர முதல்– மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 8–ந்தேதி பதவி ஏற்றார்.

அவருடன் 2 துணை முதல்–மந்திரிகள் உள்பட 18 மந்திரிகள் பதவி ஏற்றனர்.

புதிய மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது.

இதன்படி முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு நீதி நிர்வாகம், மின்சாரம், தொழில் வர்த்தகம், அரசு துறை நிர்வாகம் போன்ற இலாகாவை கவனிப்பார்.

துணை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ள கே.ஏ.கிருஷ்ண மூர்த்திக்கு வருவாய் துறையும், இன்னொரு துணை முதல்வர் சின்ன ராஜப்பாவுக்கு உள்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான எனமல ராமகிருஷ்ணுடுவுக்கு முக்கிய இலாகாவான நிதிதுறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் என்.டி.ராம ராவ் ஆட்சியை சந்திரபாபு நாயுடு கவிழ்த்த போது சட்டசபை சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதீய ஜனதாவை சேர்ந்த மந்திரிகள் மாணிக் கல்யாராவுக்கு அறநிலையத்துறையும், கிஷோர் பாபுவுக்கு சமூக நலம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இலாகா ஒதுக்கப்பட்டதையொட்டி முதல்–மந்திரிசபை கூட்டம் சந்திரபாபு நாயுடு தலைமையில் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இதில் விவசாய கடன் தள்ளுபடி, பென்சன் திட்டம், குடிநீர் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

புதிய ஆந்திராவின் முதல் சட்டசபை கூட்டம் வருகிற 19–ந்தேதி கூடுகிறது. ஐதராபாத்தில் உள்ள பழைய சட்டசபை கட்டிடம் ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top