கும்பகோணத்தில் பரபரப்பான படப்பிடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர்!

ithu namma aalu‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ‘இது நம்ம ஆளு’.

இந்த ரொமாண்டிக் ‘லவ் ஸ்டோரியில்’ ஹீரோவாக சிம்புவும், ஹீரோயினாக நயன்தாராவும் நடிக்கிறார்கள். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை அவரது தந்தை டி.ராஜேந்தரே தயாரிக்கிறார். சிம்பு படங்கள் எல்லாம் தொடங்குவதுதான் வெளியில் தெரியும். ஆனால் படம் முடியுமா? முடியாதா? வருமா? வராதா? என்பதெல்லாம் சிதம்பர ரகசியம். திடீர் திடீரென அவ்வப்போது புரளி கிளம்பும்.

அந்தவகையில் ‘இது நம்ம ஆளு’ படம் தொடங்கிய சில நாட்களிலேயே ட்ராப்பாகிவிட்டது. ஒருசில காரணங்களால் தாமதமான ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எப்படியோ படத்தை இறுதிகட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். தற்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று படமாக்கப்பட்டது. அதில் சிம்பு-நயன்தாரா இருவரும் செமத்தியான ஆட்டம் போட்டு அசத்தியிருக்கின்றனர். காதல் தோல்விக்குப் பின் சிம்பு, நயன்தாரா இணையும் படம் என்பதால் இது நம்ம ஆளு படத்திற்கு விளம்பரம் செய்யாமலே பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top