குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் பலி!

f830ed5c-cf56-46c4-87ba-850794aadc41_S_secvpfகுஜராத் மாநிலம் சூரத் நகரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.

பார்லே பாயின்டையும் தாபி நதி அருகில் உள்ள அடாஜனையும் இணைக்கும் பிரமாண்ட பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை பார்லே பாயின்டில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து அவர்கள் மீது விழுந்து அமுக்கியது.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த சூரத் நகராட்சி ஒரு குழுவை அமைத்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து நிரந்தர குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top