ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சீனாவின் லீ நா!

unnamed (7)ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனவைச் சேர்ந்த லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சர்வதேச தர வரிசையில் 20வது இடத்தில் இருக்கும் சுலோவேகியா வீராங்கனை டொமினிகா சிபுல்கோவா-வை 7-6,6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் லீ நா.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்ஸில் ஏற்கனவே கடந்த 2011-ஆம் ஆண்டு கிம் கிலிஸ்டர்ஸிடமும், 2013-ஆம் ஆண்டு விக்டோரியா அசெரென்ஸகாவிடமும் இறுதிப் போட்டியில் கோப்பையை நழுவ விட்ட லீ நா,இம்முறை நிதானமாக விளையாடி முதன் முறையாக சாம்பியன் பட்டதை வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் பெறும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top