ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சந்திர பாபு நாயுடு

chandrababu_naidu_PTI_new_360x270ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

ஆளுநர் நரசிம்மன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள் வைத்திலிங்கம், செந்தில் பாலாஜி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குண்டூர் மாவட்டம் நாகார்ஜூன நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரையுலக பிரபலங்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா பிரிவினைக்கு பின் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ளார். மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 102 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top