இந்தியா ஹாக்கி லீக் போட்டி இன்று தொடக்கம்

ஹாக்கிஇரண்டாவது இந்தியா ஹாக்கி லீக் போட்டி டெல்லி, மும்பை, ராஞ்சி உள்ளிட்ட 6 நகரங்களில் ஹாக்கி இந்தியா லீக் போட்டித் தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த தொடரின் அரையிறுதியில் டெல்லி அணி 3-1 என்ற கணக்கில் பஞ்சாபை வீழ்த்தியது.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இத்தொடரின் முதல் ஆட்டத்திலேயே டெல்லியை வீழ்த்த பஞ்சாப் முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில், கடந்த முறை 2-ம் இடம் பிடித்த டெல்லி அணி, இம்முறை கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்கலாம் என்பதால் முதல் ஆட்டமே விறுவிறுப்பாக அமைந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top