உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு!

fifa-world-cupஉலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது. ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

ஒவ்வொரு பிரிவில் உள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றான 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து கால்இறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிக்கு அணிகள் முன்னேறும்.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும். 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3–வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4–வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2–வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலக கோப்பையில் (2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top