நியூசிலாந்திற்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டி : இந்தியாவிற்கு 315 ரன் இலக்கு

கிரிக்கெட்தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த முதல் இரண்டு,ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஆக்லாந்தில், இன்று நடைபெற்று வரும் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி நியூசிலாந்து அணியை முதலில் பேட் செய்ய பணித்தது.தொடக்க வீரர் ரைடர் 20 ரன்னில் வெளியேற பின்னர் வந்த வில்லியம்சன், குப்திலுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அரை சதம் அடித்த வில்லியம்சன் 65 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்.அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும்,மறுமுனையில் அபாரமாக விளையாடி குப்தில் தனது 5வது சதத்தை நிறைவு செய்தார். 111 ரன் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். இவர் 12 பவண்டரிகள், மற்றும் 2 சிக்சர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் சமி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top