கிரானைட் மோசடி: பி.ஆர்.பழனிச்சாமி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

20TH_GRANITE_1183696fமதுரை மாவட்டம் மேலூர் பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், வண்டிப்பாதை ஆகியவற்றில் அரசு அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி பி. ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவனம் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் கிரானைட் முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளம் பட்டியை சேர்ந்த கோட்டை வீரன் என்பவருக்கு மேலூர் அருகே உள்ள கீழையூரில் 1 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பி.ஆர்.பழனிச்சாமி அவரது உறவினர் முருகேசன் ஆகியோர் கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதாகவும், அதற்கு 5 கோடியே 5 லட்சம் பணம் தருவதாக உறுதியளித்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்துள்ளனர். அதற்கு பணம் ஏதும் கோட்டை வீரனுக்கு கொடுக்க வில்லை.

இது குறித்து அவர், பி.ஆர்.பழனிச்சாமியிடம் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மதுரை 2–வது மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் கோட்டைவீரன் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் ரூ.5 கோடி மோசடி செய்துள்ள பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர் முருகேசன் உள்பட சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top