பாதிரியார் அலெக்சிஸ் உடல் நலத்துடன் உள்ளார் ஆப்கானிஸ்தான் போலீஸ் தகவல்

201406061312277348_Alexis-Prem-Kumar-is-good-health-Afgan-Police_SECVPFஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் உடல் நலத்துடன் உள்ளார் என்று ஹெராத் மாகாண போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாண பகுதியில் கல்விச் சேவையில் ஈடுபட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட பாதிரியார் பிரேம்குமாரை பத்திரமாக மீட்பது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பாதிரியாரை கடத்தியது குறித்து ஆப்கானிஸ்தானின் எந்த தீவிரவாத அமைப்பும் வெளிப்படையாக பொறுப்பு ஏற்கவில்லை. பிரேம் குமாரை மீட்பது தொடர்பாக அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.  ஆப்கானிஸ்தானில் தமிழக பாதிரியார் கடத்தப்பட்டது தொடர்பாக 3 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிரியார் அலெக்சிஸ் உடல் நலத்துடன் உள்ளார் என்று டைமஸ் நவ் தொலைக்காட்சியிடம் பேசிய ஹெராத் மாகாண போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அலெக்சிஸை மீட்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும் ஹெராத் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top