பாலா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஷாம்!

directer bala ஷாம் மற்றும் ஜெயம் ராஜா வைத்து விரைவில் படம் இயக்கப் போவதாக பாலா தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பாலா, ஷாம், ஜெயம் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டார்.

விழாவில் பாலா பேசுகையில் ஜெயம் ரவி மற்றும் ஷாமின் நடிப்பு தனக்குப் பிடித்திருப்பதாகவும், விரைவில் அவர்களுடன் ஒரு படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலாவின் படங்களில் நடித்த பிறகுதான் தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்கள் பலர் பிரபலம் அடைந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

விக்ரம், சூர்யா, ஆர்யா,விஷால் மற்றும் அதர்வா உள்ளிட்டோருக்கு பாலாவின் படங்கள் மிக முக்கியமான வாய்ப்பாக அமைந்தன என்றால் மிகையில்லை. இந்த லிஸ்டில் விரைவில் ஜெயம் ரவியும், ஷாமும் இணைவார்களா என்பது விரைவில் தெரியவரும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top