புழல் ஜெயிலில் கைதிகள் மீது தாக்குதல் நடந்ததா? நீதி விசாரணை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

201406060128464841_The-High-Court-judgment-on-the-plea-hearing-postponed_SECVPFபுழல் ஜெயிலில் கைதிகள் மீது தாக்குதல் நடந்ததா? என்பது பற்றி நீதி விசாரணைக்கு கோரிய மனு மீது ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயில் அதிகாரி தாக்குதல்

சென்னை ஐகோர்ட்டில் கைதிகள் உரிமை கழகத்தின் இயக்குனர் வக்கீல் பி.புகழேந்தி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மார்ச் 24–ந் தேதியன்று புழல் ஜெயிலில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. நான் அங்கு சென்று விசாரித்தபோது, தடுப்புக் காவல் சட்டத்தின்படி ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிகள் 500 பேர், தங்கள் மீதான வழக்கை துரிதமாய் விசாரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதாகவும், அவர்கள் மீது ஜெயில் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதில் 20–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது. எனவே, இதுசம்பந்தமாக நீதி விசாரணை நடத்தவேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த மனுவுக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. மவுரியா பதில்மனு தாக்கல் செய்தார்.

அதில், புழல் ஜெயிலிலுள்ள 2 ஆயிரத்து 713 கைதிகளில், 1,360 பேர் தடுப்புக் காவல் கைதிகளாகும். வழக்குகளை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மார்ச் 24–ந் தேதி காலையில் அவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலமை கட்டுக்கடங்காமல் சென்றதாலும், மற்ற கைதிகளுக்கும் அங்குள்ள சொத்துகளுக்கும் சேதம் வருவதை தடுப்பதற்காகவும், எச்சரிக்கை விடுத்த பின்னர் சிறிதளவு பலப்பிரயோகம் செய்தோம். அதில் சிலருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. அவர்கள் ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். எனவே, இதில் நீதி விசாரணை தேவையில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

இந்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top