தங்கம் சவரனுக்கு ரூ 112 உயர்வு!

goldகடந்த ஒரு வாரத்திற்கு பிறகு தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.

சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 2,730 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 14 ரூபாய் விலை உயர்ந்து 2,553 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 20,424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 70 காசு விலை உயர்ந்து 43 ரூபாய் 60 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 640 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 40,780 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top