மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தஞ்சையில் ரயில்மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது!

1743497_801894269828034_1079523694_nதஞ்சையில் கொண்டுவரப்படவிருக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து அவ்வியக்கத்தின் அமைப்பாளர் லெனின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘’பாராளுமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மீத்தேன்வாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராடுவோம் என்று வாக்குறுதி அளித்தனர். தமிழக முதல்–அமைச்சரும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் மீத்தேன் திட்டத்தில் ஒப்பந்தம் போட்டுள்ள கெய்ல் நிறுவனம் தன்னுடைய பணிகளை நிறுத்தவில்லை. எனவே மீத்தேன்வாயு மற்றும் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நீர்பங்கீட்டு குழு அமைத்து காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கினை நிலைநாட்ட கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீத்தேன் திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கோரி தஞ்சையில் இன்று காலை திட்டமிட்டபடி ரயிலை மறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, ரயில் மறியிலில் ஈடுபட முயன்ற மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top