தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை எதிர்த்த முக்கிய தலைவர்கள் கைது

e23f5b7b-5777-4657-a169-de4126208ec3_S_secvpfதாய்லாந்து நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அந்நாட்டு ராணுவ தளபதி பிரயுத் சான் ஓ சா, கடந்த மே 22ந் தேதியன்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது அறிவித்தார். அங்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

அரசியல் சூழல் மேலும் மோசமாவதை தடுக்கவே ராணுவம் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் ராணுவம் கூறியது. அந்நாட்டின் முன்னாள் அதிபரான யிங்லக் சினவத்ரா ஆகியோர் ஏற்கனவே ராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.  ஆனாலும் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களின் தலைவரான சொம்பத் பூங்கம் கைது செய்யப்பட்டதாக அவரது பேஸ்புக் தகவல் கூறியுள்ளது. ஆட்சியை கைப்பற்றிய பின் ராணுவத்தினரை வந்து சந்திக்குமாறு பூங்கம் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் அதற்கு உடன்பட மறுத்து தலைமறைவானார். தப்பிச் சென்ற அவரை ராணுவத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top