வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு திடீர் மருத்துவ பரிசோதனை!

பேரறிவாளன்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு திடீரென மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ராஜீவ் கொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

20 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு திடீரென சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனை பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்று இந்த பரிசோதனையை சிறை அதிகாரிகள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top