அஜித்தின் அடுத்த படம் பிப்ரவரி 6-ம் தேதி பூஜையுடன் துவக்கம்!

அஜித்ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், நடிகர் அஜீத் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்குவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்திற்கான பூஜை பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறுகிறது.

நடிகர் அஜித்துடன், இயக்குனர் கெளதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவும்,இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தமாகியுள்ளனர்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கும் படங்களின் பூஜையை பெரும்பாலும் வியாழக்கிழமை தான் தொடங்குவார்.அதேபோல் இந்தப் படத்தின் பூஜையையும் பிப்ரவரி 6-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top