கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்கச்சத்தீவில் மீன்பிடி உரிமை குறித்த ஒரு வழக்கில் கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜி.கே.வாசன் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையே கடந்த 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இணக்கமான தீர்வு ஏற்பட்டு அது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அங்குள்ள அந்தோனியார் கோவிலின் ஆண்டு விழாவுக்கு செல்ல மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக கூறுவதே தவறு எனவும், 1974 ஆம் ஆண்டில் பாக் ஜலசந்தியிலிருந்து ஆடம் பாலத்திற்கு எல்லை மாற்றப்படுவது குறித்து இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படியே கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாகவும் அரசு தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top