சீனா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் !

ரஜினிகாந்த்சீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரகசியப் பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பிய பிறகு, வெளியில் அதிகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.முக்கியமான திரைப்படங்களைக் கூட வீட்டிலேயே கண்டு களித்தார். இமயமலைக்கு செல்வதைக் கூட அவர் தவிர்த்து வந்தார்.

சென்னையில் நடைபெற்ற தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டார்.சமீபத்தில் சென்னையில் உள்ள நடிகர் மோகன்லாலின் பண்ணைவீட்டில் நடைபெற்ற 80களில் கலக்கிய நடிகர் – நடிகைகளின் சந்திப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அதற்குப் பின் நேற்று மாலை அவர் தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 10 அன்று சீனாவுக்கு ரகசியப் பயணம் செய்ய உள்ளார்.கோச்சடையான்’ படத்தின் பணிகளைக் கவனிப்பதற்காக அவர் சீனா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top