சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா: சந்திரசேகரராவ், ஜெகன்மோகனுக்கு அழைப்பு

2a738518-1c78-413a-8c1f-5fba71eb322a_S_secvpf8–ந்தேதி பதவி ஏற்பு விழாவுக்கு வாருங்கள் என்று சந்திரசேகரராவ், ஜெகன்மோகனுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில பிரிவினைக்குப் பின் தெலுங்கானா மாநில முதல்– மந்திரியாக சந்திரசேகரராவ் நேற்று ஐதராபாத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். தெலுங்கானா மாநிலம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அடுத்து ஆந்திர முதல்– மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வருகிற 8–ந்தேதி விஜயவாடாவுக்கும் குண்டூருக்கும் இடையில் உள்ள மங்களபுரி என்ற இடத்தில் பதவி ஏற்றுக் கொள்கிறார்.

தனது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கு சந்திர பாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். சந்திரசேகரராவ் பதவி ஏற்றபோது அவர் சந்திரபாபு நாயுடுவையோ, சீமாந்திரா தலைவர்களையோ மரியாதைக்கு கூட அழைக்கவில்லை.

ஆனால் சந்திரபாபு நாயுடு சந்திரசேகரராவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார். அதில் தனது பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஏற்கனவே பிரதமர் மோடியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட காங்கிரஸ் அல்லாத 10 மாநில முதல்– மந்திரிகளுக்கும் சந்திரபாபு நாயுடு அழைப்பு அனுப்பி உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top