சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறந்தபட்சம் ரூ10 இருக்கலாம் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்

xBL15_TN_RAIL_1756870f.jpg.pagespeed.ic.7ldhtQ2K60சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை – சென்னை விமான நிலையம் இடையே 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையும், சைதாப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 8.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்டமான தூண்கள் அமைத்து பறக்கும் பாதையும் அமைக்கப்படுகிறது.

சுரங்க ரயில் பாதை 2014-ம் ஆண்டு இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிடையில் பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

முதல் கட்டமாக 2014-ஆம் ஆண்டு கோயம்பேடு- பரங்கிமலை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை-சென்னை விமான நிலையம் இடையே 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயிலில் குறைந்த பட்ச கட்டணம் ரூ 8, ரூ 10, தற்காலிக கட்டணாமாக நிர்ணயிக்க உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரயிலில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை சென்னை விமான நிலையத்திற்க்கு ரூ40 ஆக இருக்கும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top