உத்தரபிரதேசத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை: 5வது குற்றவாளி கைது!

10304430_784520528248374_5246236955108371826_nஉத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவத்தில் 5வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில் 14 மற்றும் 15 வயதான சகோதரிகள் இருவர், கடந்த 27ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக புகார் அளித்தும், காவல்துறையினர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், சிறுமிகள் இருவரும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.

பணியில் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தில் தொடர்புடையதாக நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 5வது நபரை, காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று, சிறுமிகளின் பெற்றோரிடம் ஆறுதல் கூற உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top