தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் குமார் தோவல் நியமனம்!

ajit_dovalதேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் உளவுத் துறை தலைவர் அஜீத் குமார் தோவல் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போது 69 வயதாகும் தோவல் கேரள மாநிலத்தில் இருந்து ஐபிஎஸ் பணிக்கு தேர்வானவர். 2005-ம் ஆண்டில் உளவுத் துறை தலைவர் பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

1999-ல் இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டபோது, தோவல் இந்தியா சார்பில் தூதராகப் பணியாற்றினார்.

33 ஆண்டுகளுக்கு மேல் உளவுத் துறையில் பணியாற்றியுள்ள அவர் வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், காஷ்மீரில் கலவர காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர். கீர்த்தி சக்ரா விருது பெற்ற முதல் போலீஸ் அதிகாரியும் இவர்தான்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்பு அவரது உத்தரவின் பேரில் நடைபெற்றுள்ள இரண்டாவது முக்கியமான நியமனம் இது. முதலாவதாக தனது முதன்மை செயலாளராக நிர்பேந்திர மிஸ்ராவை மோடி நியமித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top