முஸ்லீம்கள் தாக்கப்பட்ட சம்பவம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்!

தெஹ்லான் பாகவிமல்லிப்பட்டினத்தில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் நேற்றிரவு இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் சாலையில் நின்று பேசி கொண்டிருந்த முஸ்லீம் இளைஞர்களை கண்மூடித்தனமாகவும், வெறித்தனமாகவும் அரிவாள், கத்திகளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அப்போது நீங்கள் தானே தேர்தல் பிரசாரத்தின் போது எங்களை ஊருக்குள் வரவிடாமல் தடுத்தவர்கள் என்று சொல்லியபடியே தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த 4 இளைஞகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மல்லிப்பட்டினத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க வேட்பாளர் முருகானந்தம் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர், முஸ்லீம்களுக்கு எதிராக பேசவும், செயல்படவும் கூடியவர். எனவே அவரை முஸ்லீம் பகுதிகளில் அனுமதித்தால் சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என முன்கூட்டியே காவல்துறையினரிடம் முஸ்லீம்கள் முறையிட்டும், மீறி அனுமதித்ததால் பெரும் கலவரம் ஏற்பட்டது. முஸ்லீம்களின் வாகனங்கள், கடைகள் தாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை காரணம் காட்டியே இந்த தாக்குதலும் நடைபெற்றுள்ளது.

மோடி பதவி பெற்றவுடன் தைரியம் பெற்றுள்ள இதுபோன்ற வன்முறையாளர்கள் கர்நாடகாவிலும், குஜராத்திலும் நேற்று முன்தினம் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை மாதிரியாக கொண்டு மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த வன்முறைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top