மத்திய அமைச்சரவைக் கூட்டம் திடீர் ரத்து!

modi-3-12_650_052814085844இன்று நடைபெற இருந்த மத்திய அமைச்சரவையின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது பற்றி முடிவெடுப்பதற்காக மத்திய அமைச்சரவையின் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதில், சபாநாயகர் தேர்வு மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பற்றி விவாதிக்கப்பட இருந்தது.

இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய மக்களவையில் மூத்த உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது இதை தெரிவித்த அவர், நாட்டில் புதிதாக 100 சிறிய நகரங்களை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படம் என்றும் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top