ஆஸ்திரேலிய ஓபன்: சீனாவின் லீ நா மற்றும் ஸ்லோவாக்கியாவின் சிபுல்கோவா இறுதிப் போட்டிக்கு தகுதி.

li-naஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சீனாவின் லி நா மற்றும் ஸ்லோவாக்கியாவின் சிபுல்கோவா ஆகியோர் இறுதி ஆட்டத்திற்கு விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், கனடாவின் பவ்சார்டை எதிர்கொண்ட லி நா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார்.இவர் பவ்சார்டை 6 – 2, 6 – 3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்லோவாக்கியாவின் சிபுல்கோவா 6 – 1, 6 – 2 என்ற நேர் செட்களில் போலந்தின் ரட்வன்ஸ்காவை வென்றார்.

இதன்மூலம் நாளை மறுதினம் நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் இறுதி ஆட்டத்தில் லி நா, சிபுல்கோவாவை எதிர்கொள்ள
இருக்கிறார்.

unnamed (16)

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top