தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகை

10398659_543925979049764_1379270253550644932_nதமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது.

நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது.

இன்று காலை 10:00 மணிக்கு, அரசுப் பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வழிப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து, ‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’ நடைபெற்றது.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 250க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் துவக்குவதைக் கண்டித்தும், தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மே பதினேழு இயக்கம்,  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க.,
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்த் தேச விடுதலை இயக்கம் உள்ளிட்ட 20 அமைப்புகளும் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் 250க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

10398659_543925979049764_1379270253550644932_n10334359_543925959049766_2997628398551962985_n 10308075_543925955716433_3539378334519158821_n 10419943_543925842383111_5747308677633476335_n


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top